வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட மாநிலங்களில் விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் குறையவில்லை. இதற்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனையடுத்து சண்டிகர், அமிர்தசரஸ், ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.