டெல்லியில் முப்படைத் தளபதிகளுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து தற்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.