பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி பயங்கரவாதியின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் அதிகாரியான அகமது ஷரீஃப் சவுத்ரி என்பவர் பயங்கரவாதியின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் அகமது ஷரீஃப் சவுத்ரி என்றும், ஒசாமா பின்லேடனுக்கு ரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வழங்கியவர் சுல்தான் பஷிருதீன் மஹ்மூத் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.