பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் பக்கத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மூலமாக பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணியளவில் அமிர்தசரஸின் காசா கான்ட் மீது ஆயுதங்களுடன் பறந்து வந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாகிஸ்தானின் திட்டங்கள் முறியடிக்கப்படும் எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய வீடியோவை இந்திய ராணுவம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.