இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் காஷ்மீரைக் கைப்பற்றும் பாகிஸ்தானின் எண்ணம் தோல்வியில் தான் முடியும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காகக் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதிகளைக் குவித்துக் கொண்டுள்ள பாகிஸ்தானுக்குத் தோல்வியே கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், ஒருவேளை பாகிஸ்தான் போரை விரும்பினால், அதற்கும் இந்தியா தயாராகத்தான் இருக்கிறது எனக் கூறினார்.