கோவையில், கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 32 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.