அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.