இந்திய விமானத்தை தாக்கியதாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட வீடியோ போலியானது என்றும், ராணுவ விளையாட்டான ARMA 3 என்பதன் ஒரு காட்சிதான் அது என்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செய்தி இதழ் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதலில் பாகிஸ்தான் பெரிய இழப்புகளை சந்தித்தது. இருப்பினும், பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு ராணுவமும் பொய்யான செய்திகளை உலக அளவில் பரப்பி வருகின்றன.
அந்த வகையில், பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஒரு வீடியோ கேம் காட்சியை பகிர்ந்து, பொய் செய்தியை பரப்பியது அம்பலமாகி உள்ளது. அவர் வெளியிட்ட காட்சி பிரபல ராணுவ விளையாட்டான ARMA 3 இலிருந்து எடுக்கப்பட்டவை என இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொய் செய்திகளை பரப்பி வரும் பாகிஸ்தான் அரசை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.