சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகும்கூட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனை அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் வழக்கம்போல கண்டுகொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில், இது குறித்து சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நபர் ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ வெளியாகியுள்ளது.