அறிவற்ற மக்களால் தான் போர் திணிக்கப்படுவதாக முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதுதொடர்பாக புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், போர் நிறுத்தத்தை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தபோது அவர் மீது சிலர் மோசமாக கருத்துகளை முன்வைத்ததாக தெரிவித்தார்.
போர் வெடிக்கும்போது மரணமும், அழிவும் தொடங்குவதாக கூறிய அவர், போர் என்பது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், போர் தொடங்கினால் எல்லையில் உள்ள குழந்தைகள் பெற்றோரை இழந்த வாடும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.