போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது.
“ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடந்த 9ஆம் தேதி பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கடந்த 8 மற்றும் 10ஆம் தேதிகளில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு பேசினார்.
மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் கடந்த 10-ஆம் தேதி மார்கோ ரூபியோ பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம் தொடர்பான விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.