நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக நாட்டின் எல்லை பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ உறுதியளித்துள்ளது.