பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானும் பொதுமக்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதலில் ஈடுபடவே போர் பதற்றம் அதிகரித்தது.
குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க தொடங்கியது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரு தரப்பும் சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், இன்று அதிகாலை பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திறகு சென்ற பிரதமர் மோடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடினார்
அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் தக்க பதிலடி கொடுத்த வீரர்கள், பிரதமருடன் புகைப்படம் எடுத்து தங்கள் மகழ்ச்சியை வெளிப்படுத்தினர்.