‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் உலக அளவில் 43 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் கடந்த 1-ம் தேதி வெளியானது.
8 கோடி ரூபாய் செலவில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், உலக அளவில் 43 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளனர். விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.