பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி கிடைக்க அப்போதைய அதிமுக அரசுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிக் கூடாரத்தைக் கைது செய்தது தனது அரசுதான் என்றும், முதலமைச்சர் ஸ்டாலினைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தான் நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டதால்தான், அதற்கான நீதி
கிடைத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், வழக்கம் போல திமுக ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.
யார் அந்த SIR என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருக்கும் ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, ஸ்டாலின் அரசு வாதாடியதாகத் தெரிவித்தார் .
கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், திமுக ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதைப் பார்த்து வெட்கித் தலைகுனியுங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.