பாகிஸ்தானில் அணு ஆயுதக் கிடங்கு பாதிக்கப்பட்டு கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திக்கு அந்நாடே விளக்கமளிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என தெரிவித்தார். மேலும், இந்திய ராணுவம் தாக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.