ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவுக்கும் விதமாக நாடு முழுவதும் பாஜக சார்பில் மூவர்ண கொடி ஏந்தி பேரணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்ற பேரணியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், , பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் H ராஜா,தமிழிசை சௌந்தரராஜன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், , மாநில துணை தலைவர் கரு நாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பல மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல் தனியார் கல்லூரி என்சிசி மாணவர்கள், தன்னார்வலர்கள், தேசப்பற்றாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.