கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் நீர் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 412 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீர் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் ரசாயண கழிவுகள் ஆற்றில் கலப்பதே இதற்குக் காரணமென அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.