பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி கோட்டி விஷ்ணு நாம ப்ராயண கமிட்டி சார்பில் கோவையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியும், இந்திய ராணுவ வீரர்களும் நலமுடன் இருக்க வேண்டி, கோட்டி விஷ்ணு நாம ப்ராயண கமிட்டி சார்பில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
மேலும் இதில் முன்னாள் கர்னல் சதீஷ்குமார் மற்றும் ராணுவத்தில் பங்காற்றியவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.