இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அலறியதாக அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தை இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக் காட்டியதாக தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் மூலமாக இந்தியா ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் உடந்தையாக இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் திறமையற்றதாக இருப்பதாக விமர்சித்துள்ள மைக்கேல் ரூபின் இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு கிடைத்தது அழிவுடன் கூடிய பேரிழப்பு என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அலறியதாக கடுமையாக விமர்சித்துள்ளார்
இந்தியா ஒருபோதும் போரை விரும்பியது இல்லை என கூறியுள்ள அவர், இந்தியா மீது பாகிஸ்தான் போரை திணித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.