டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர்- இ- தொய்பாவின் கிளை அமைப்பான The Resistance Front என்ற அமைப்பு பொறுபேற்றது.
இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சில் இந்த குற்ற சம்வவத்திற்கு நிதி அளிப்போர் மற்றும் ஆதரிப்போருக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
இருப்பினும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் டி.ஆர்.எப் அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை.
இதனையடுத்து அந்த அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க மத்திய அரசு அமைத்த குழு ஒன்று பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளை சந்தித்து பேசியது. அப்போது பஹல்காம் தாக்குதலில் டிஆர்எப் பங்கு குறித்து ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது.