கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உட்பட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மே 19-ல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.