சூரியுடன் நடித்தது குறித்துப் பல பேர் தன்னிடம் கேட்டதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
சூரி நடித்துள்ள மாமன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, தன்னிடம் ஏன் நிறையப் பேர் சூரி சாருடன் நடிக்க ஓகே – வா எனக் கேட்டார்கள் எனத் தெரியவில்லை எனக் கூறினார்.
மேலும், சூரி மாதிரியான ஒருவருடன் நடிப்பது தனக்குப் பெரிய பெருமை எனக் கூறிய அவர், அவ்வளவு பெரிய உயரத்தில் சூரி இருக்கிறார் எனத் தெரிவித்தார்.