தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!
Aug 24, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

Web Desk by Web Desk
May 21, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துருக்கியைத்  தலைமையிடமாகக் கொண்ட விமான நிலைய தரை கையாளும் செலிபி நிறுவனத்துக்கு வழங்கிய பாதுகாப்பு அனுமதியை இந்தியா உடனடியாக ரத்து செய்துள்ளது.  பாகிஸ்தானுக்குத் துருக்கி காட்டிய வெளிப்படையான ஆதரவின் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்ரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில்,பாகிஸ்தான் விமானப்படை இரண்டு நாட்களில் முக்கிய இந்திய விமான தளங்களைக் குறிவைத்து 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இந்திய பாதுகாப்புப் படைகள் அவை அனைத்தையும் நடுவானிலேயே இந்தியா இடைமறித்துச் சுட்டு வீழ்த்தின.

பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் எல்லாம் துருக்கியின் தயாரிப்புகள் என்று தெரியவந்தது. இதனால் சன்னி இஸ்லாமிய நாடுகளான  துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆழமான ராணுவ ஒத்துழைப்பு வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய துருக்கியை இந்திய மக்கள் புறக்கணித்துள்ளனர். BOYCOTT TURKEY ஹேஷ் டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளது. இந்தியச் சுற்றுலாப் பயணிகள் துருக்கியைத் துரோக நாடு என்று கைகழுவியுள்ளனர். துருக்கியில் இருந்து மார்பிள் இறக்குமதியை நிறுத்துவதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். திரைப்படத் துறையினரும் துருக்கியைப் புறக்கணித்துள்ளனர். துருக்கியுடனான வர்த்தகத்தை இந்திய வியாபாரிகள் முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களையும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை  இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக ரத்து செய்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், கண்ணூர், கோவா கான்பூர், அகமதாபாத் ஆகிய ஒன்பது இந்திய விமான நிலையங்களில் தரைவழி கையாளும் சேவைகளை இந்நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கி வந்தது.

இந்த விமான நிலையங்களில் பயணிகளை நிர்வகித்தல், விமானச் செயல்பாடுகள், சரக்குகளை ஏற்றுதல்,இறக்குதல்  மற்றும் பொது விமானப் போக்குவரத்துக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் செலேபி நிறுவனப் பொறுப்பில் இருந்தது.

இந்த சிலிபி நிறுவனம், துருக்கி அதிபர் எர்டோகனின் இளைய மகளான சுமேயே பைரக்தருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை, செலிபி இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. 39 வயதான Sumeyye சுமேயேவின் கணவரான Selcuk Bayraktar செல்சுக் பைரக்தார், ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட ஆளில்லா ட்ரோன்களைத் தயாரிக்கும் (baykar defense) பைகர் டிஃபென்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த பைகர் டிஃபென்ஸ் தயாரித்த ட்ரோன்களையே இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் சிலிபி நிறுவனத்துக்கு வழங்கிய பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு செய்துள்ளது. இந்த நடவடிக்கை,சிபிலியின் பிற நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

நாட்டின் மக்களின் பாதுகாப்பை விட எதுவும் உயர்ந்ததல்ல என்று தெளிவுபடுத்தியுள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, தேசிய நலனும் பொதுப் பாதுகாப்பும் மிக முக்கியமானவை என்று கூறியுள்ளார். மேலும், பயணிகளின் வசதி, சரக்கு செயல்பாடுகள் மற்றும் சேவை தொடர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதை   சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகக்  கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் மற்றும் சரக்குகளைத் தடையின்றி கையாளுவதை உறுதி செய்யும் வகையில், செலேபியில் பணிபுரியும் ஊழியர்களைத் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags: Action in the national interest: India washes its hands of the Turkish companypakistanஇந்தியாதுருக்கிOperation Sindoor
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

Next Post

களம் இறங்கும் 5 அட்வென்ச்சர் பைக்குகளின் பட்டியல்!

Related News

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies