ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி வெறும் இராணுவ வெற்றி மட்டுமல்ல. இந்திய பாதுகாப்புத் துறையின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வெற்றியாகும். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் DRDO, இஸ்ரோ, மற்றும் அரசின் பிற தொழில்நுட்ப நிறுவனத்தின் அயராத உழைப்பும் ஆராய்ச்சியும் உலகையே பிரமிக்க வைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள மாநிலங்களில் 26 இடங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்தியது. இந்திய வான்வெளியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடுவானிலேயே இந்தியா இடைமறித்து அழித்தது.
இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு சிறு சேதத்தையும் ஏற்படுத்த முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியுற்றது. இந்த வெற்றிக்குக் காரணமாக Akashteer வான் பாதுகாப்பு அமைப்பு அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த வான்வழி ட்ரோன்கள், ஏவுகணைகள், பிற மைக்ரோ ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVகள்) மற்றும் ஏவுகணைகளை இந்திய வான் எல்லைக்குள் நுழைவதைத் தடுத்து அழித்துள்ளது Akashteer.
மேம்பட்ட வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையான அமைப்பு Akashteer முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் சொந்த வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். Akashteer என்பது உள்நாட்டு AI-யால் இயங்கும் வான் பாதுகாப்பு அமைப்பாகும். Akashteerயை இந்தியாவின் DRDO, இஸ்ரோ மற்றும் பெல் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து உருவாகியுள்ளன.
எந்தவொரு வெளிநாட்டுக் கூறுகள் அல்லது செயற்கைக்கோள் சார்புகளும் இல்லாமல் கட்டப்பட்ட முதல் செயல்பாட்டு AI போர்-மேகம் என்று Akashteer பாராட்டப்படுகிறது. எதிரி விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து அழிக்கும் தொழில்நுட்பம் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புதான் Akashteer .
இது அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு கட்டுப்பாடு அமைப்பாகும். இது பல்வேறு ரேடார் அமைப்புகள், சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஒரே செயல்பாட்டுக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கிறது. அதாவது, கட்டுப்பாட்டு அறை, ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் என வான் பாதுகாப்பு அமைப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுவான, நிகழ்நேர வான் படத்தை வழங்குகிறது. இதற்கு இஸ்ரோவின் NAVIC போன்ற செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன.
இது ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவுகிறது. வான்வழி அச்சுறுத்தல்களுக்கு விரைவான பதிலடியைச் செயல்படுத்துகிறது. AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த Akashteer, வெவ்வேறு இலக்குகளைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்,ட்ரோன்கள் வந்தாலும் கூட, அவற்றைத் துல்லியமாக வானிலே இடைமறித்து அழிக்கிறது.
பொதுவாக வான் பாதுகாப்பு பூமியில் உள்ள ரேடார்கள், மனிதனால் கண்காணிக்கப்படும் அமைப்புகள் மற்றும் கட்டளைச் சங்கிலிகளால் தூண்டப்படும் தரையிலிருந்து வான் ஏவுகணை பேட்டரிகளை பெரிதும் நம்பியிருக்கின்றன.
இந்நிலையில்,Akashteer தொழில்நுட்பம் போர்ப் பகுதிகளில் குறைந்த அளவிலான வான்வெளியைக் கண்காணிக்கவும், தரை அடிப்படையிலான வான் பாதுகாப்பு ஆயுத அமைப்புகளைத் திறம்படக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது. மேலும்,Akashteer தாக்கவரும் UAV களின் கண்களுக்குத் தெரியாமலேயே அவற்றை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டதாகும். மேலும், ஆபரேட்டர் உள்ளீடு இல்லாமல் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் திறன் கொண்ட ட்ரோன்களுடன் விமானப் பாதைகளை மாற்றும் திறன் கொண்டதாகவும் Akashteer விளங்குகிறது.
இதன் மூலம், உள்நாட்டுச் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் AI போர் ஒருங்கிணைப்பைப் போர் தளத்தில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்த முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அல்லாத நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஒரு வரியில் சொல்வதானால், இந்திய வான் எல்லைக்குள் எந்த நேரத்திலும், எத்தனை வேகத்தில், எத்தனை வந்தாலும், Akashteer வேகமாகப் பார்க்கிறது, வேகமாகத் தீர்மானிக்கிறது மற்றும் வேகமாகத் தாக்குகிறது.
மொத்தத்தில்,இந்திய பாதுகாப்புப் படைகளின் குறிப்பிடத்தக்கச் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப மேன்மையை Akashteer வெளிப்படுத்துகிறது.