சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, சூளைமேடு, அமைந்தகரை என பல்வேறு பகுதிகளில் பரவலாக நள்ளிரவில் மழை பெய்தது. மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.