பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை பிற நாடுகளுக்கு சென்று விளக்குவதற்காக, 7 எம்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் எம்பி சசி தரூர், திமுக எம்.பி. கனிமொழி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 எம்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அடுத்த வாரம் முதல் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.