ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவை குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்திக் காட்டியதாகத் தெரிவித்தார்.
இந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் அதிக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் காலம் மாறி, தற்போது ஏற்றுமதி செய்வதாகக் கூறினார்.
மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.