ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது.
இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தபோதும், ட்ரோன் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில், ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் வலுவான வெளிப்பாடாக, பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை ராணுவத்தினர் வழங்கினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.