மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு 2023-ம் ஆண்டு புனே வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இருவரும் இந்தோனேசியாவில் இருந்து ஜகார்த்தா வழியாக இந்தியா திரும்பியபோது, மும்பை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளனர்.
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ ஏற்கனவே அறிவித்து இருந்தது.