பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்தது.
ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3-வது அடுக்கு பிரியாததால் இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், ராக்கெட்டின் 3-வது அடுக்கு பிரியாததால், திட்டம் தோல்வி அடைந்ததாகக் கூறினார். ஆய்வுக்குப் பின் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.