இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் குறித்துத் தெரிவித்த ஒரு கருத்தால், பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பையும் தகர்த்தது.
ஆனால், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது குறித்து அந்நாட்டின் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஔரங்கசீப் அகமது, மிகக் குழப்பமான விளக்கம் ஒன்றை அளித்தார்.
அதில், இந்தியாவின் S-400 ஒரு வகையான புவி ஈர்ப்பு மையம் என்றும், அதனால் அந்த அமைப்பைக் கண்டறிய முடியவில்லை எனவும், அதனைக் கண்டுபிடிப்பதை விட அதனை அழிப்பது எளிமையானது என்றும் தெரிவித்தார்.
தவறான ஆங்கிலத்தில், குழப்பும் விதத்தில், புவி ஈர்ப்பு மையம் உள்ளிட்டவற்றை தொடர்புப்படுத்தி அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைச் சுட்டிக்கட்டி அவரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.