‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளைத் தாக்கும் நோக்கத்தையே பாகிஸ்தானிடம் தெரிவிக்க முயன்றதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டுச் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்திருந்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளைத் தாக்கும் நோக்கத்தையே பகிர்ந்துகொள்ள முயன்றதாக இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.