ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியப் பிரிவு, வெளியிட்டுள்ள வீடியோனது நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், வீடியோவில் பேசியுள்ள ராணுவ வீரர் ஒருவர், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, நீதி எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் என்றென்றும் இந்த தாக்குதல் நினைவில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.