நடிகை வித்யுலேகா தன்னை உருவ கேலி செய்வது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வித்யுலேகா அறிமுகமானார்.
‘வீரம், புலி, ஜில்லா’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யுலேகா, தான் நடித்த எல்லா படங்களிலும் இயக்குநர்கள் தன்னை உருவக் கேலி செய்யும் காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்தனர் எனக் கூறினார்.
ஆனால், தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பா.பாண்டி’ படத்தில் மட்டுமே தன்னை உருவக் கேலி செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.