அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது இளம்பெண் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுகவின் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி என விமர்சித்துள்ளார்.
திமுக இளைஞரணி நிர்வாகியான தெய்வச்செயல், கல்லூரி மாணவியை ஏமாற்றிப் பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
தன்னை போன்றே பல பெண்கள் தெய்வச்செயலின் கொடூர பிடியில் சிக்கியுள்ளதாக மாணவி குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் துணையோடு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.