தமிழகத்தில் உள்ள அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக வெளியான செய்தி வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வெயிலில் பாடுபடும் விவசாயிகளின் மொத்த உழைப்பையும் இப்படி அலட்சியப்படுத்தி வீணாக்குவதுதான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் தானியப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உண்டாகிவிடும் என எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டுமெனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.