கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா சாதனை படைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடியின் நல்லாட்சியில் கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக முன்னேறி சாதனைப் படைத்துள்ளது நமது பாரதம் என தெரிவித்துள்ளார். கடந்த 2014-15 இல் 10.51 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் 105 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 16.85 லட்சம் மெட்ரிக் டன் இந்திய கடல்சார் பொருட்கள் 130 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பல லட்சம் மீனவர்களின் உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கப் பெற்றதுடன் இந்தியப் பொருளாதாரமும் உயர்ந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவத்வித்துள்ளார்.