உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த போரினை நிறுத்த உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த போரை நிறுத்தும் முயற்சியாக, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைப்பேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருநாடுகளுக்கு இடையேயான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.