டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய சுப்மன் கில், 53 பந்துகளில் 93 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதன் மூலம் டி-20 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த சும்பன் கில் இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் 154 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த மைல் கல்லைக் கடந்துள்ளார். இந்த பட்டியலில் 143 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை கடந்த கே.எல்.ராகுல் முதல் இடத்தில் உள்ளார்.