பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்கக் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
இந்த மோதலின்போது புனிதத் தலமான பொற்கோவிலை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணைகள் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இதனையடுத்து எதிர்காலத்திலும் பொற்கோவிலை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் எனக் கோவில் நிர்வாகத்திடம் இந்திய ராணுவம் கூறியது.
அதன் பேரிலான அனுமதியைத் தொடர்ந்து தற்போது பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்புடன் வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.