சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இங்குச் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் வெடி வைத்து பாறைகளைத் தகர்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாறை சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர்.