இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!
Oct 6, 2025, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Web Desk by Web Desk
May 21, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

Operation Sindoor-ன் போது பாகிஸ்தான் ஏவிய சீனாவின் PL-15 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக வானில் சுட்டு வீழ்த்தியது. இந்தியாவின் எல்லைக்குள் நொறுங்கி விழுந்த  PL-15 ஏவுகணையின் பாகங்களை, விரிவான ஆய்வுக்காகப் பார்வையிடுவதற்கு பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட Five Eyes நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் முதல்முறையாகச் சீனாவில் தயாரிக்கப்பட்ட PL-15 நீண்ட தூர வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையைச் செலுத்தியது. JF-17 போர் விமானத்தால் ஏவப்பட்ட  இந்த சீனாவின் ஏவுகணையை இந்தியா வானிலேயே இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியது.

ரஷ்யாவின் S-400 மற்றும் உள்நாட்டிலேயே  உருவாக்கப்பட்ட ஆகாஷ் தீர் போன்ற ஒருங்கிணைந்த வான் தடுப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாகத் தடுத்தது. முதன் முறையாகப் போரில் சீனாவின் PL-15E ஏவுகணை சுக்கு நூறாக நொறுங்கி தோல்வியைக் கண்டுள்ளது.

பஞ்சாபின் ஹோஷியார்பூரில் முழுமையாகச் சேதமடையாத  PL-15 ஏவுகணை  மீட்கப் பட்டது. துருக்கியின்  YIHA மற்றும் சோங்கார் ட்ரோன்கள் உட்பட மீட்கப்பட்ட சீனாவின் PL-15E ஏவுகணை இடம்பெற்றிருந்த காணொளியை இந்திய விமானப் படை வெளியிட்டது.

சீனாவின் PL-15E ஏவுகணையின் தோல்வி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சேதமடைந்த PL-15E ஏவுகணை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. PL-15E ஏவுகணை கிடைத்திருப்பது  இந்தியாவுக்கு வெறும் போர் வெற்றி மட்டுமல்ல; இது ஒரு மூலதன வெற்றியாக அமைந்துள்ளது.

“ரகசிய ஆயுதக் கிடங்கிற்குப் போகாமல் PL-15E யைக்  காணும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை என்று அமெரிக்க இராணுவ ஆய்வாளர்  ஜான் ரிட்ஜ்,  தனது எக்ஸ் தளத்தில் ஆச்சரியத்துடன் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் ஒருங்கிணைந்து PL-15E ஏவுகணையின் உட்பகுதிகளை ஆராய விருப்பம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் தங்களுடைய மேம்பட்ட AIR -TO-AIR  ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் ரஃபேல் விமானங்களில் பிரான்ஸின் மெடியார் ஏவுகணை பொருத்தப் பட்டுள்ளது. இது PL-15E க்கு முக்கிய போட்டி ஏவுகணையாகும்.

அதேபோல், சீனாவின் எந்த வான்வழித் தாக்குதல்களையும் சமாளிக்கும் வகையில், தனது விமானப்படையை ஜப்பான் மேம்படுத்தி வருகிறது. எனவே, இரு நாடுகளும் PL-15E திறன்களை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறது.

PL-15E ஏவுகணையின் ரேடார் கையொப்பம், மோட்டார் அமைப்பு, வழிகாட்டி தொழில்நுட்பம் மற்றும்  செயல்பாட்டில் மின்னணு ஸ்கேன் தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய இந்நாடுகள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

PL-15 என்பது  சீனா ஏர்போர்ன் ஏவுகணை அகாடமி (CAMA) தயாரித்த காட்சிக்கு அப்பாற்பட்ட AIR TO AIR ஏவுகணை ஆகும். PL-15   அதிகபட்ச செயல்பாட்டு வரம்பைக் கொண்டிருக்கும் ஏவுகணை ஆகும். 200 முதல்  400 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டதாகும். இது மேக் 4 ஐ விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஏவுகணையாகும்.

J-20, J-16, J-10C, J-11B மற்றும் JF-17 விமானம் உட்படப் பல தளங்களில் இருந்து செலுத்தக் கூடிய வகையில் PL-15ஏவுகணை வடிவமைக்கப் பட்டுள்ளது.  மேம்பட்ட J-20 ஸ்டெல்த் போர் விமானத்தில், நான்கு PL-15 ஏவுகணைகளைச் சுமந்து செல்ல முடியும் என்றும் கூறப் படுகிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட AIM-120D ஏவுகணை சுமார் 160 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் நிலையில், PL-15 அதை விட அதிகம் தூரம் மற்றும் அதிக வேகத்தில் செல்லக் கூடியதாகும்.

மேலும், 200 கிலோமீட்டர் வரம்பு வரை மட்டுமே செல்லக்கூடிய பிரான்ஸின்  Meteor ஏவுகணையை விட அதிக திறன் கொண்டதாகும். இதில், Meteor ஏவுகணைகளை இந்தியா தனது ரஃபேல் விமானங்களில் பொருந்தியுள்ளது. இருப்பினும், PL-15 ஏவுகணைகள் விரைவான வேகத்தையும் நீண்ட இலக்குகளைத் தாக்கும் திறனையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

PL-15 ரக ஏவுகணைகளின் தாக்குதல்களை எதிர்த்து அழிக்கும் வகையில், ரஷ்யாவின் R-37M ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை  இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது. ரஷ்யாவின் R-37M ஏவுகணைகள் 300-400 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.

PL-15E வருகையால் அமெரிக்கா AIM-260 JATM எனும் புதிய ஏவுகணை தயாரிப்பை விரைவுபடுத்தியுள்ளது. இது PL-15E வை விட வலிமையானதும், நீண்ட தூர மற்றும் மின்னணு தாக்குதல்களுக்கு எதிரானது ஆகும்.

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வெற்றி, சீனாவுக்கு அவமானமாக முடித்துள்ளது. அதிலும்,சீனாவின்  PL-15E ஏவுகணை முழுமையாக இந்தியாவின் கையில் கிடைத்திருப்பது, ஒரு வரப் பிரசாதமாகும்.

வெடிக்காத ஏவுகணையை ஆராய்ச்சி செய்வதால், மிகவும் மேம்பட்ட AIR TO AIR  ஏவுகணைகளில் சீனா பயன்படுத்திய தொழில்நுட்ப நுண்ணறிவைக் கண்டுகொள்ள முடியும் என்று சர்வதேச இராணுவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணைசீனாவின் PL-15 ஏவுகணைpakistanindian armyOperation SindoorChina's missile shot down by India: Countries interested in learning about the technology
ShareTweetSendShare
Previous Post

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

Next Post

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies