டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு வழங்காததால் விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் இதுவரை விசாரணை அதிகாரியை தமிழக அரசு நியமிக்கவில்லை என கூறப்படுகிறது.
விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என 2022ம் ஆண்டு முதலே மத்திய புலனாய்வு அமைப்புகள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தன. மேலும், தேசிய அளவில் தமிழகத்தில் மட்டுமே விசாரணை அதிகாரி இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பான ஆவணங்களையும் தமிழக அரசு அமலாக்கத்துறைக்கு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஊழல் புகார்களை சரியாக விசாரிக்காமல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவசர அவசரமாக முடித்து வைத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.