தேர்தலின்போது திமுக செலவழிக்கும் பணத்திற்கான கொள்ளை இடமாக டாஸ்மாக் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்றபாஜக ஊடகப்பிரிவு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
டாஸ்மாக் ஊழலில் சிக்கியுள்ள ரத்தீஷ் துணை முதல்வருக்கு நெருங்கியவர் என்று கூறிய நயினார் நாகேந்திரன், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் போல, தமிழக அரசும் மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது என அவர் கூறினார்.
தேர்தலின்போது திமுக செலவழிக்கும் பணத்திற்கான கொள்ளை இடமாக டாஸ்மாக் உள்ளது என்று குற்றம் சாட்டியவர், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
ED பெயரைக் கேட்டாலே திமுகவினருக்குத் தூக்கம் வருவதில்லை என்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்ததே தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
நீட் தேர்விலிருந்து திமுகவால் விலக்கு பெற முடியாது என்றும் தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என குற்றம் சாட்டியவர் மக்கள் நலனுக்கான மத்திய அரசின் திட்டங்களை திமுக எதிர்க்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.