சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட ஊடகப்பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில் தமிழகத்தில் பாஜக ஊடகப்பிரிவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.