ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கோவையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. பாஜக கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.