திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆள்மாறாட்டம் செய்து சொத்துகளை விற்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் அட்டுவபட்டி பகுதியில் ரவிசந்திரன் என்பவருக்குச் சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அவர் சிங்கப்பூரில் வசித்து வரும் நிலையில் அவருக்குச் சொந்தமான 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நில பத்திரம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பலூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிய பத்திரத்தை விற்பனை செய்ய முயன்றபோது போலி ஆதார் அட்டையை வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்துச் சார் பதிவாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார், ஜானகிராமனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.