அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பரங்கிமலையில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தைத் தொடங்கி வைத்தபின் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர்,
அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அரக்கோணத்தில் திமுக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தற்போது சார்கள், தம்பிகளின் ஆட்சி தான் நடந்து வருகிறது என்றும் “2047-இல் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா மாற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று எல்.முருகன் தெரிவித்தார்.