இந்தியாவும் – ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வாராந்திர மாநாட்டுக்குப் பின்னர் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 15-ம் தேதியன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைபேசியில் உரையாடியது குறித்து பேசினார்.
இதுகுறித்து பேசிய ரந்தீர் ஜெய்ஸ்வால், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு வலுவான ஆதரவளித்ததற்காக ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்ததாக அவர் கூறினார். இந்தியாவிற்கும் – ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சமீபத்திய முயற்சிகளை உறுதியாக நிராகரித்ததையும் ஜெய்சங்கர் வரவேற்றதாகத் தெரிவித்தார்.
மேலும், அப்போது இந்தியாவும் – ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.